நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

Advertisement

முதலில் பேட்டிங் விளையாடிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மற்றும் அகா சல்மான் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சதமடித்தனர். பாபர் அசாம் 161 ரன்களையும், தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்த அகா சல்மான் 103 ரன்களையும் குவித்தனர். சர்ஃபராஸ் அகமது 86 ரன்கள் அடிக்க, முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 438 ரன்களை குவித்தது.

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் டாம் லேதம் ஆகிய இருவரும் இணைந்து மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 183 ரன்களை குவித்தனர். கான்வே 92 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். சதமடித்த டாம் லேதம் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அபாரமாக பேட்டிங்  ஆடிய கேன் வில்லியம்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5வது இரட்டை சதத்தை விளாசினார். வில்லியம்சன் 200 ரன்களை குவிக்க, இஷ் சோதி 65 ரன்கள் அடித்தார். முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 612 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது நியூசிலாந்து அணி. 

அதன்பின் 174 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் அபாரமாக விளையாடி 96 ரன்களை குவித்து 4 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சர்ஃபராஸ் அகமது (53), சௌத் ஷகீல் (55) ஆகிய இருவரும் அரைசதம் அடிக்க, முகமது வாசிம் 43 ரன்கள் அடித்தார். இதன்மூலம் 2ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் அடித்த பாகிஸ்தான் 2ஆவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

இதன்மூலம் கடைசி நாள் ஆட்டத்தில் 15 ஓவர்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு 138 ரன்களை இழக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான். அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த டெவான் கான்வே - டாம் லேதம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளெவன உயர்த்தினர். ஆனால் 7.3 ஓவார்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக நடுவார்கள் அறிவித்தனர். 

Advertisement

இதனால் நியூசிலாந்து அணி 61 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் இன்னிங்ஸ் முடிவடைந்ததால், இப்போட்டி சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்போட்டியில் இரட்டை சதமடித்த கேன் வில்லியம்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News