மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில்  'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நியூசிலாந்து மகளிர் அணியும்,  இலங்கை மகளிர் அணியும் நேற்று பலப்பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வுசெய்தது.

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணியில் பெர்னடைன் - சூஸி பேட்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் பெர்னடைன் 32 ரன்களில் ஆட்டமிழக்கா, மறுமுனையிலிருந்து சூஸி பேட்ஸ் 56 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

Advertisement

அதன்பின் வந்த அமிலியா கெர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், அரைசதம் கடந்தும் அசத்தினார். இதன்மூலம்  20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக அமிலியா கெர் 66 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் இலங்கை ரன்குவிக்க திணறியதுடன், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பறிதவித்தது.

இறுதியில் இலங்கை அணி 15.5 ஓவர்களில் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் அமிலியா கெர், லியா தஹுஹு தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலிலும் இரண்டாம் இடத்தை பிடித்தது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News