Advertisement

New Zealand vs Afghanistan Dream11 Prediction Match 14, ICC T20 World Cup 2024: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள நியூசிலாந்து அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடிய முதல் போட்டியிலேயே அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் நியூசிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியை விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

NZ vs AFG: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs ஆஃப்கானிஸ்தான்
  • இடம் - பிராவிடன்ஸ் மைதானம், கயானா
  • நேரம் - ஜூன் 8ஆம் தேதி அதிகாலை 5 மணி (இந்திய நேரப்படி)

NZ vs AFG: Pitch Report

Advertisement

பிராவிடன்ஸ் மைதானமானது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சமநிலைக்கு பெயர் போனது. இங்குள்ள மைதானமாது முதலில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவகையில் வேகம் மற்றும் ஸ்விங்கிற்கு வழிவகுக்கும். அதன்பின் ஆட்டம் செல்ல செல்ல சுழற்பந்து வீச்சாளர்களாலும் தாக்கத்தை ஏறபடுத்த முடியும். ஒட்டுமொத்தமாக, இந்த மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடுகளத்தின் வேகம் குறையும் போது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரும் உதவியாக அமையும். இருப்பினும் களத்தில் நின்று விளையாடும் பேட்டர்களால் நிச்சயம் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் சேஸிங்கை தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

NZ vs AFGHead-to-Head

  • மோதிய போட்டிகள் - 02
  • நியூசிலாந்து - 01
  • ஆஃப்கானிஸ்தான் - 00
  • முடிவில்லை - 01

NZ vs AFGLive Streaming Details

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம்.

New Zealand vs Afghanistan Predicted Teams

நியூசிலாந்து: ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சம் (கே), ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதீ, டிரென்ட் போல்ட், மேட் ஹென்றி

ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (wk), இப்ராஹிம் சத்ரான், குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், ரஷித் கான் (c), முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்.

NZ vs AFG Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: டெவோன் கான்வே, ரஹ்மானுல்லா குர்பாஸ் (கேப்டன்)
  • பேட்டர்ஸ்: கேன் வில்லியம்சன் (துணை கேப்டன்), இப்ராஹிம் சத்ரன், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டார்லி மிட்செல்
  • ஆல்-ரவுண்டர்கள்: அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி
  • பந்துவீச்சாளர்கள்: டிரென்ட் போல்ட், ரஷித் கான்
Advertisement

New Zealand vs Afghanistan Fantasy Tips, NZ vs AFG Dream11 Team, New Zealand vs Afghanistan: Predicted XIs, NZ vs AFG: Pitch Report, NZ vs AFG Live Streaming Details, NZ vs AFG: Head-to-Head, NZ vs AFG Dream11 Prediction match 14 ICC T20 World Cup 2024

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News