நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

Updated: Wed, Oct 01 2025 19:04 IST
Image Source: Google

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றனர். இதில் இரு அணிகளுக்கும் இடையேயன முதல் போட்டி இன்று (அக்டோபர் 1) மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் டெவான் கான்வே, டிம் செஃபெர்ட், மார்க் சாப்மேன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் இணைந்த டிம் ராபின்சன் - டேரில் மிட்செல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டேரில் மிட்செல் 34 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பெவான் ஜேக்கப்ஸும் 20 ரன்னில் நடையைக் கட்டினார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த டிம் ராபின்சன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். 

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 181 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷுயிஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் டிராவிஸ் ஹெட் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த மேத்யூ ஷார்ட் 29 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் அரைசதம் கடந்து அசத்திய மிட்செல் மார்ஷ் 85 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 21 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. மேலும் இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை