NZ vs ENG, 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட ஹாரி புரூக்; தோல்வியைத் தவிர்க்க போராடும் நியூசிலாந்து!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்யுமாறும் அழைத்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன் மற்றும் கிளென் பிலீப்ஸ் ஆகியோரது அரைசதங்களின் காரணமாக முதல் இன்னிங்ஸில் 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது. இதில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 93 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலீப்ஸ் 58 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து சார்பில் பஷீர், பிரிடன் கேர்ஸ் தலா 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஸாக் கிரௌலி- பென் டக்கெட் களமிறங்கினர். இதில் ஸாக் கிரௌலி ரன்கள் ஏதுமின்றியும், ஜேக்கப் பெத்தேல் 10, ஜோரூட் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் பென் டக்கெட் 46 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய ஒல்லி போப் 77 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலிய்னுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஹாரி புரூக் சர்வ்தேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்திப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக கேப்டன் பென் ஸ்டோக்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூல்ம் இரண்டாம் நாள்ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக் 132 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 37 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கபட்ட ஹாரி புரூக் 15 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 171 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த கிறிஸ் வோக்ஸ் ஒரு ரன்னிலும், அதிரடியாக விளையாடிய கஸ் அட்கின்சன் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, சதத்தை நெருங்கிய பென் ஸ்டோக்ஸும் 80 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரைடன் கார்ஸ் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்த நிலையில் மறுபக்கம் வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 499 ரன்களைச் சேர்த்த கையோடு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் நாதன் ஸ்மித் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றின்ர். இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 151 ரன்கள் முன்னிலையும் பெற்றது.
அதன்பின் இன்னிங்ஸைத் தொடங்கிய் நியூசிலாந்து அணியில் கேப்டன் டாம் லேதம் ஒரு ரன்னிலும், டெவான் கான்வே 8 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த் கேன் வில்லியம்சன் - ரச்சின் ரவீந்திரா இணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரச்சின் ரவீந்திரா 24 ரன்னில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சன் தனது அரைசதத்தை பதிவுசெய்தார். பின் 61 ரன்களை எடுத்திருந்த நிலையில் கேன் வில்லியம்சனும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனையடுத்து களமிறங்கிய் டேரில் மிட்செல் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய டாம் பிளெண்டல் ரன்கள் ஏதுமின்றியும், கிளென் பிலீப்ஸ் 19 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டேரில் மிட்செல் 31 ரன்களுடனும், நாதன் ஸ்மித் ஒரு ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.