இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று வெல்லிங்டனில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் டக்கெட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஸாக் கிரௌலி 17 ரன்னிலும், ஜோ ரூட் 3 ரன்னிலும், ஜேக்கப் பெத்தேல் 16 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் இங்கிலாந்து அணி 43 ரன்னிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த ஹாரி புரூக் மற்றும் ஒல்லி போப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இருவரும் தங்களின் அரைசதங்களை பதிவுசெய்ததுடன், இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஒல்லி போப் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸும் 2 ரன்னுடன் நடையைக் கட்டினார். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் என 123 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

இதையடுத்து களமிறங்கிய வீரர்களில் கிறிஸ் வோக்ஸ் 18 ரன்களைச் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் - டெவான் கன்வே இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் டாம் லேதம் 17 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், டெவான் கான்வேவும் 11 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய கேன் வில்லியம்சன் பொறுப்புடன் விளையாடிய கேன் வில்லியம்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 3 ரன்னில் விக்கெட்டை இழந்த நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் 37 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டேரில் மிட்செலும் 6 ரன்னுடன் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனால் நியூசிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறிவருகிறது. இதில் வில்லியம் ஓ ரூர்க் ரன்கள் ஏதுமின்றியும், டாம் பிளெண்டல் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 194 ரன்கள் பின் தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News