New Zealand vs Pakistan 2nd T20I Dream11 Prediction: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. 

Advertisement

இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி முதல் போட்டியை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் உள்ளது. அதேசமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் விளையாடும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

NZ vs PAK 2nd T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்-  நியூசிலாந்து vs பாகிஸ்தான்
  • இடம் -  யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானம், டுனெடின்
  • நேரம் - மார்ச் 18, காலை 6.30 மணி (இந்திய நேரப்படி)

NZ vs PAK 2nd T20I, Pitch Report

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை நடந்து முடிந்துள்ள 7 டி20 போட்டிகளில் 5 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 2 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 165 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 224 ரன்கள் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம். 

NZ vs PAK T20I Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 45
  • பாகிஸ்தான் -23
  • நியூசிலாந்து - 20
  • முடிவில்லை - 02
Advertisement

NZ vs PAK 2nd T20I: Where to Watch?

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காண முடியும். இது தவிர, அமேசான் பிரைம், சோனி லிவ் மற்றும் ஃபேன் கோட் செயலிகளிலும் இந்த போட்டியை ரசிகர்கள் காண முடியும்.

NZ vs PAK 2nd T20I, Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - டிம் செஃபெர்ட் (துணை கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - ஃபின் ஆலன், டிம் ராபின்சன்
  • ஆல்ரவுண்டர் - மைக்கேல் பிரேஸ்வெல், ஆகா சல்மான், ஷதாப் கான், குஷ்தில் ஷா
  • பந்துவீச்சாளர்கள் - ஜேக்கப் டஃபி (கேப்டன்), கைல் ஜேமிசன், அப்ரார் அகமது, ஷஹீன் அஃப்ரிடி.
Advertisement

New Zealand vs Pakistan Probable Playing XI

New Zealand Probable Playing XI: டிம் , பில் ஆலன், டிம் ராபின்சன், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் ஹே (வாரம்), மைக்கேல் பிரேஸ்வெல் (கேட்ச்), கைல் ஜேமிசன், இஷ் சோதி, ஜேக்கப் டஃபி, வில்லியம் ஓ ரூர்க்.

Pakistan Probable Playing XI: முஹம்மது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), ஹசன் நவாஸ்/உஸ்மான் கான், ஆகா சல்மான் (கேப்டன்), இர்பான் கான், ஷதாப் கான், அப்துல் சமத், குஷ்தில் ஷா, ஜஹந்தத் கான்/ஹாரிஸ் ரவுஃப், ஷஹீன் அqப்ரிடி, முகமது அலி, அப்ரார் அகமது.

Advertisement

NZ vs PAK Dream11 Prediction, NZ vs PAK 2nd T20I, NZ vs PAK Dream11 Team, Fantasy Cricket Tips, NZ vs PAK Pitch Report, New Zealand vs Pakistan Probable Playing XI, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, New Zealand vs Pakistan

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News