Advertisement

New Zealand vs Papua New Guinea Match 39 Dream11 Prediction, ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரி 9ஆவது பதிப்பு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்று போட்டிகளானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் 8 அணிகள் எது என்பதும் ஏறத்தாழ முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள 39ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து அணியை எதிர்த்து பப்புவா நியூ கினி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியானது லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்று நாடு திரும்பும் என்ற ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

Advertisement

NZ vs PNG: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs பப்புவா நியூ கினி
  • இடம் - பிரையன் லாரா கிரிக்கெட் மைதானம், டிரினிடாட்
  • நேரம் - ஜூன் 17, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

NZ vs PNG Pitch Report

டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தின் பவுண்டரிகள் எல்லைகள் சிறியது என்பதால் இது பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக கருதப்படுகிறது. அதேபோல் இந்த மைதானத்தில் சராசரி ஸ்கோரானது 160 முதல் 165 ஆக உள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் வானவேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு இந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு புதிய பந்தில் கூடுதல் பவுன்ஸ் இருக்கு என்பதால் அவர்களாலும் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Advertisement

NZ vs PNG T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 00
  • நியூசிலாந்து - 00
  • பப்புவா நியூ கினி - 00

NZ vs PNG: Where to Watch?

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Advertisement

New Zealand vs Papua New Guinea Probable Playing XI

நியூசிலாந்தின் உத்தேச லெவன்: ஃபின் ஆலன், டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, லோக்கி ஃபெர்குசன், டிரென்ட் போல்ட்.

பப்புவா நியூ கினி உத்தேச லெவன்: டோனி உரா, அசாத் வாலா (கேப்டன்), லெகா சியாக்கா, செசே பாவ், ஹிரி ஹிரி, சாத் சோப்பர், கிப்ளின் டோரிகா, நார்மன் வனுவா, அலி நாவோ, ஜான் கரிகோ, செமோ கமி.

Advertisement

NZ vs PNG T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - டெவான் கான்வே, ஃபின் ஆலன், கிப்ளின் டோரிகா
  • பேட்ஸ்மேன் - கேன் வில்லியம்சன்
  • ஆல்ரவுண்டர் - அசாத் வாலா, ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர்
  • பந்துவீச்சாளர்கள் - டிரென்ட் போல்ட் (கேப்டன்), லோக்கி ஃபெர்குசன், டிம் சௌதீ (துணை கேப்டன்), அலி நாவோ.

NZ vs PNG Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match NZ vs PNG, NZ vs PNG Dream11 Team, Fantasy  Cricket Tips, NZ vs PNG Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between New Zealand vs Papua New Guinea

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News