நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவந்த இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியை இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமனில் இருந்தன.

Advertisement

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று குயின்ஸ்டவுனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை களமிறங்கினர். 

Advertisement

இதில் நிஷங்கா 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த குசால் பெரேரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெண்டிஸ் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குசால் பெரேரா 33 ரன்களில் ஆட்டமிழக்க, குசால் மெண்டிஸும் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய தனஞ்ஜெய டி சில்வா 20 ரன்களையும், தசுன் ஷன்கா 15 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் பென் லிஸ்டர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டிம் செய்ஃபெர்ட் - சாத் பௌஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். பின் 17 ரன்களில் பௌஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டாம் லேதமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிம் செய்ஃபெர்ட் அரைசதம் கடந்தார். பின் 31 ரன்களைச் சேர்த்த லேதம் ஆட்டமிழக்க, மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டில் செய்ஃபெர்ட் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 88 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

Advertisement

அதன்பின் களமிறங்கிய டேரில் மிட்செல் 15, மார்க் சாப்மேன் 16, ஜேம்ஸ் நீஷம் ரன்கள் ஏதுமின்றியும் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். இருப்பினும், நியூசிலாந்து அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தினர். 

இதன்மூலம் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் செய்ஃபெர்ட் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News