ஆஸ்திரேலிய மகளிர் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று வெலிங்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி மற்றும் போப் லிட்ச்ஃபீல்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலிசா ஹீலி 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை போப் லிட்ச்ஃபீல்டும் 25 ரன்னில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி 29 ரன்னிலும், பெத் மூனி 14 ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

Advertisement

பின்னர் களமிறனக்கிய் அனபெல் சதர்லேண்ட் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய ஆஷ்லே கார்ட்னர் 19 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் சதர்லேண்டுடன் இணைந்த தஹ்லியா மெக்ராத்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்ப்டுத்திய அனபெல் சதர்லேண்ட் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தஹ்லியா மெக்ராத்தும் 34 ரன்னில் விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அனபெல் சதர்லேண்ட் 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 105 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 291 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் மோலி பென்ஃபோல்ட் 4 விக்கெட்டுகளையும், ஈடன் கார்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை சூஸி பேட்ஸ் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் இணைந்த ரோஸ் ஜேம்ஸ் - அமெலியா கெர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் ரோஸ் ஜேம்ஸ் 27 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சோஃபி டிவைன் 15 ரன்னிலும், புரூக் ஹாலிடே 7 ரன்னிலும், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அமெலிய கெர் 38 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். மேலும் இப்போட்டியில் 6ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய மேடி க்ரீன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 3 பவுண்டரிகளுடன் 26 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதனால் நியூசிலாந்து அணி 30.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ரன்களைச் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டதால் இப்போட்டி நடைபெறுவதில் தடை ஏற்பட்டது. தன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி இப்போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய அனபெல் சதர்லேண்ட் ஆட்டநாயகி விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News