கேப்டன்சி குறித்து ஜோ ரூட்டின் ஆலோசனைகளை பெற்றுள்ளேன்- ஒல்லி போப்!

Updated: Thu, Aug 29 2024 11:56 IST
Image Source: Google

இலங்கை அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. 

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று (ஆகஸ்ட் 29) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை வெல்லும் என்பதாலும், இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இப்போட்டியில் விளையாடும் இரு அணியின் பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டனாக மோசமான ஆட்டத்திறு பிறகு பேட்டிங் மற்றும் கேப்டன்சியின் தேவைகளை எவ்வாறு சமன் செய்வது என்பது குறித்த வழிகாட்டுதலை ஜோ ரூட்டிடம் கேட்டதாக ஒல்லி போப் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஒல்லி போப், “கேப்டனாக இந்த வாரத்தை நான் மிகவும் ரசித்தேன். ஆனால் என்னிடம் இருந்து ரன்கள் கிடைக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அதனை என்னால் சரிசெய்ய முடியும் என்று நம்புகிறேன். ஏனெனில் நான் பேட்டிங்கின் போது எனது கேப்டனைஷிப்பை ஒதுக்கிவிட்டு எனது பேட்டிங்கில் முழு கவனத்தையும் செலுத்த முடிவுசெய்துள்ளேன். இது பேட்டி மற்றும் கேப்டன்சி என இரண்டு விஷயங்களையும் தனித்தனியாக வைத்திருப்பது பற்றியது.

Also Read: Funding To Save Test Cricket

மேலு இதுபற்றி நான் ஜோ ரூட்டிடம் ஆலோசித்துள்ளேன். அதில் அணியின் கேப்டனாகவும் மற்றும் ஒரு பேட்டராகவும் எப்படி ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்படுவது என்பது குறித்து கேட்டறிந்துள்ளேன்.  அவரிடம் ஆலோசித்ததன் மூலம் எனக்கு ஒரு யுக்தி கிடைத்துள்ளது. ரூட்டிடம் பேசும்போது, அவர் இந்த விளையாட்டில் எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன். மேலும் அவரது ஆலோசனைகள் மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை