Manchester Test: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அறிமுக வீரர் அர்ஷ்தீப் சிங் பயிற்சியின் ஏற்பட்ட காயம் காரணமாக நான்காவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. 

இதிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பயிற்சியின் போது காயத்தைச் சந்தித்தார். இதுகுறித்து வெளியான தகவலின் படி அர்ஷ்தீப் சிங் வலைப்பயிற்சியில் சாய் சுதர்ஷனின் ஷாட்டைத் தடுக்க முயன்றபோது கையில் காயத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்ததுடன், இத்தொடரில் இருந்து விலகும் சூழலும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அணியின் மருத்துவக் குழு அவரது காயத்தை மதிப்பிட்டு வருவதாகவும், அதன் முடிவிலேயே அவர் இத்தொடருக்கான இந்திய அணியுடன் பயணிப்பாரா இல்லையா என்பது தெரியவரும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் அர்ஷ்தீப் சிங் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாகவும், அவருக்கு பதில் ஹரியானாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் காம்போஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அன்ஷுல் கம்போக் லெவனில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. 

ஹரியானாவைச் சேர்ந்த அன்ஷுல் கம்போஜ் இதுவரை 24 முதல் தர போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் ஒரு அரைசதம் உள்பட 486 ரன்களையும், பந்துவீச்சில் 79 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய கம்போஜ், 11 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News