Advertisement

Pakistan vs Ireland Match 36 Dream11 PredictionICC T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் லீக் சுற்றுடனே தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. இந்நிலையில் நாளை நடைபெறும் 36ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஏற்கெனவே இவ்விரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளதால இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று ஆறுதலைத் தேடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

PAK vs IRE: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs அயர்லாந்து
  • இடம் - சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானம், ஃபுளோரிடா
  • நேரம் - ஜூன் 16, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

PAK vs IRE Pitch Report

இந்தப் போட்டி ஃபுளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு நடந்த டி20 சர்வதேச போட்டிகளில் பெரும்பாலானவற்றில் சேஸிங் செய்துள்ள அணிகளே வெற்றி பெற்றுள்ளன. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 157 ரன்களாக உள்ளது. அதேசமயம் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 245 ரன்கள் உள்ளது. இதன் காரணமாக நிச்சயம் இங்கு நடைபெறும் போட்டிகளில் வானவேடிக்கைக்கு பஞ்சமிருக்காது என்பதை ரசிகர்கள் உறுதியாக நம்பலாம்.

PAK vs IRE T20I Head to Head

  • மோதிய போட்டிகள் - 04
  • பாகிஸ்தான் - 03
  • அயர்லாந்து - 01
  • முடிவில்லை - 00
Advertisement

PAK vs IRE: Where to Watch?

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Pakistan vs Ireland Probable Playing XI

Advertisement

பாகிஸ்தான் உத்தேச லெவன்: முகமது ரிஸ்வான், சைம் அயூப், பாபர் அசாம் (கேப்டன்), ஃபகார் ஸமான், உஸ்மான் கான், ஷதாப் கான், இமாத் வாசிம், ஷஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப், முகமது அமீர்.

அயர்லாந்து உத்தேச லெவன்: ஆண்ட்ரூ பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அடேர், பேரி மெக்கார்த்தி, கிரேக் யங், ஜோஷுவா லிட்டில்.

PAK vs IRE T20 World Cup Dream11 Team

Advertisement

விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான் (கேப்டன்)
பேட்ஸ்மேன்கள் - பாபர் அசாம், ஜார்ஜ் டோக்ரெல், ஃபகார் ஸமான்
ஆல்-ரவுண்டர்கள் - மார்க் அதிர் (துணை கேப்டன்), கர்டிஸ் கேம்பர்
பந்துவீச்சாளர்கள் - ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, முகமது அமீர், ஹாரிஸ் ரவுஃப், பேரி மெக்கார்த்தி.

PAK vs IRE Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match  PAK vs IRE, PAK vs IRE Dream11 Team, Fantasy Cricket Tips, PAK vs IRE Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between  Pakistan vs Ireland

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News