PAK vs SL Match 3, Super FourCricket Tips: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன.

Advertisement

அந்தவகையில் நாளை நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தங்களுடைய சூப்பர் 4 ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிய கையோடு இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

PAK vs SL: Match Details

மோதும் அணிகள் - இல்ங்கை vs பாகிஸ்தான்
இடம் - ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானம், அபுதாபி
நேரம்- செப்டம்பர் 23, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

PAK vs SL: Live Streaming Details

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம், அதேசமயம், சோனி லிவ் ஓடிடி தளத்தில் இத்தொடர் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

PAK vs SL: Head-to-Head in T20Is

  • Total Matches: 23
  • Pakistan: 13
  • Sri Lanka: 10
  • No Result: 0

PAK vs SL: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ஷேக் சாயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 96 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன, இதில் 45 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 51 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 137 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 225  ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

PAK vs SL: Possible XIs

Advertisement

Pakistan: சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், முகமது ஹாரிஸ், ஃபகார் ஸமான், சல்மான் ஆகா(கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அஃப்ரிடி, சுஃபியான் முகீம், அப்ரார் அகமது

Sri Lanka: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிஷங்க, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தசுன் ஷனக, கமிந்து மெண்டிஸ், துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, நுவான் துஷார

PAK vs SL: Player to Watch Out For

Probable Best Batter

Advertisement

இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா அபாரமான ஃபார்மில் உள்ளார். மேலும் அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால், இந்த போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Probable Best Bowler

பந்துவீச்சில் பாகிஸ்தன் அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. அதேசமயம் இலங்கை அணியில் நுவான் துஷாரா, வநிந்து ஹசரங்கா உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

Advertisement

Today Match Prediction: இந்த போட்டியில் பாகிஸ்தானை காட்டிலும் இலங்கை அணி வலிமையானதாக தோன்றுவதால், இந்த போட்டியில் இலங்கை வெற்றி பெறும் என்று கணிக்கப்படுகிறது.

Also Read: LIVE Cricket Score

PAK vs SL Prediction Match 3rd Super Four Asia Cup 2025, Today Match PAK vs SL, PAK vs SL Prediction, PAK vs SL Predicted XIs, Injury Update of the match between Pakistan vs Sri Lanka

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News