PAK vs ENG, 3rd Test: சௌத் சகீல் அரைசதம்; முன்னிலை பெறுமா பகிஸ்தான்?

Updated: Fri, Oct 25 2024 13:11 IST
Image Source: Google

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பந்துவீச அழைத்தார்.

அதன்பாடி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேமி ஸ்மித் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் அரைசதம் கடந்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 267 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக் ஜேமி ஸ்மித் 89 ரன்களையும், பென் டக்கட் 52 ரன்களையும் சேர்த்தனர். 

பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சஜித் கான் 6 விக்கெட்டுகளையும், நோமன் அலி 3 விக்கெட்டுகளையும் கைப்பறினர். இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் மீண்டும் சோபிக்க தவறி சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த கேப்டன் ஷான் மசூத் - சௌத் சகீல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.

இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஷான் மசூத் மற்றும் சௌத் சகீல் ஆகியோர் தலா 16 ரன்களுடன் தொடர்ந்தனர். இதில் ஷான் மசூத் 26 ரன்களுடன் பெவிலியன் திரும்ப, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் ஷகீல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினார். 

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம் அவருன் இணைந்து விளையாடிய முகமது ரிஸ்வான் 25 ரன்னிலும், ஆகா சல்மான் ஒரு ரன்னிலும், அமர் ஜமால் 14 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் சௌத் சகீல் 72 ரன்களுடனும், நொமன் அலி 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ரெஹான் அஹ்மத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை