தென் ஆப்பிரிக்க தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

Updated: Wed, Dec 04 2024 12:09 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும், டி20 தொடரை 2-0 என்ற கணக்கிலும் பாகிஸ்தான் அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

இதையடுத்து தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் டி20 தொடரான டிசம்பர் 10ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடர் டிசம்பர் 17அம் தேதி முதலும் நடைபெறவுள்ள நிலையில், டெஸ்ட் தொடரானது பாக்ஸிங் டேவான டிசம்பர் 26ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது. 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் ஷாஹீன் அஃப்ரிடிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சஜித் கானுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அப்பாஸ் அஃப்ரிடி டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளர். 

இவர்களைத் தவிர்த்து நட்சத்திர வீரர் ஃபகர் ஸமான் உடற்தகுதி காரனமாக தென் ஆப்பிரிக்க தொடரிலும் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். அதேசமயம் டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷான் மசூத்தும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக முகமது ரிஸ்வானும் தொடர்கின்றனர். இதுதவிர்த்து பாபர் ஆசாம், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். 

பாகிஸ்தான் டெஸ்ட் அணி: ஷான் மசூத் (கேப்டன்), சௌத் ஷகீல், அமீர் ஜமால், அப்துல்லா ஷஃபீக், பாபர் ஆசாம், ஹசீபுல்லா, கம்ரான் குலாம், குர்ரம் ஷஸாத், மிர் ஹம்சா, அப்பாஸ் அஃப்ரிடி, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, நௌமன் அலி, சைம் அயூப், சல்மான் அலி ஆகா

பாகிஸ்தான் ஒருநாள் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), அப்துல்லா ஷஃபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், ஹாரிஸ் ரவுஃப், கம்ரான் குலாம், முகமது ஹஸ்னைன், முஹம்மது இர்பான் கான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, ஷாஹீன் அஃப்ரிடி, சுஃபியான் முகீம், தயாப் தாஹிர், உஸ்மான் கான்.

Also Read: Funding To Save Test Cricket

பாகிஸ்தான் டி20 அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் ஆசாம், ஹாரிஸ் ரவுஃப், ஜஹந்தத் கான், முகமது அப்பாஸ் அஃப்ரிடி, முகமது ஹஸ்னைன், முஹம்மது இர்பான் கான், உமைர் பின் யூசுப், சைம் அயூப், சல்மான் அலி ஆகா, ஷாஹீன் அஃப்ரிடி, சுஃபியான் முகிம், தயாப் தாஹிர், உஸ்மான் கான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை