சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் பாபர் ஆசாம்!

Updated: Mon, Dec 23 2024 13:20 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணி தற்சமயம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வென்றுள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அந்த அணியை சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதி செஞ்சூரியனில் தொடங்கவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட்டாக நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான இருநாட்டு அணிகளையும் அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான பாபர் அசாம் சிறப்பு சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. அதன்படி பகிஸ்தான் அணிக்காக இதுவரை 55 டெஸ்ட் போட்டிகளில் 91 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பாபர் ஆசாம் 9 சதங்கள் மற்றும் 26 அரைசதங்கள் என 43.9 என்ற சராசரியில் 3997 ரன்களைச் சேர்த்துள்ளார்.

மூன்று வடிவங்களிலும் 4000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள்

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாபர் ஆசாம் 3 ரன்கள் எடுத்தால், மூன்று வடிவங்களிலும் 4000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த உலகின் மூன்றாவது கிரிக்கெட் வீரர் எனும் பெருமையை பெறவுள்ளார். தற்போதுவரை இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். அதேசமயம் பாபர் ஆசாம் ஒருநாள் போட்டிகளில் 5,957 ரன்களும், சர்வதேச டி20 போட்டிகளில் 4,223 ரன்களையும் எடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் 12ஆவது பேட்ஸ்மேன்

Also Read: Funding To Save Test Cricket

இது தவிர, பாபர் ஆசாம் இந்த மைல் கல்லை எட்டும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த பாகிஸ்தானின் 12ஆவது வீரர் எனும் பெருமையையும் பெறவுள்ளார். அவருக்கு முன் அந்த அணியைச் சேர்ந்த யூனிஸ் கான், ஜாவேத் மியான்தத், இன்சமாம் உல் ஹக், முகமது யூசுப், அசார் அலி, சலீம் மாலிக், மிஸ்பா உல் ஹக், ஜாகீர் அப்பாஸ், அசாத் ஷபிக், முதாசர் நாசர் மற்றும் சயீத் அன்வர் ஆகியோர் இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை