நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அதேசமயம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், இந்தியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. 

Advertisement

இதனையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.  இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் எதிர்வரும் மார்ச் 16ஆம் தேதி முதல் தொடங்வுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இருநாட்டு அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.

Advertisement

இதையடுத்து எதிர்வரும் மார்ச் 16ஆம் தேதி நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் டி20 போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றடைந்தது.சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் சரியாக விளையாடாத நிலையில், வெள்ளைப் பந்து தொடர்களுக்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முன்னதாக நியூசிலாந்து டி20 தொடருக்கான பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து முகமது ரிஸவான் நீக்கப்பட்டு சல்மான் அலி ஆக அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஒருநாள் அணியின் கேப்டனாக ரிஸ்வான் தொடர்கிறார். இதுதவிர்த்து பாகிஸ்தான் டி20 அணியில் இருந்து நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் நசீம் ஷா உள்ளிட்டோரும் நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் டி20 அணி: ஹசன் நவாஸ், உமைர் யூசுப், முகமது ஹாரிஸ், அப்துல் சமத், சல்மான் அலி ஆகா (கேப்டன்), இர்ஃபான் நியாசி, குஷ்தில் ஷா, ஷதாப் கான், அப்பாஸ் அஃப்ரிடி, ஜஹந்தத் கான், முகமது அலி, ஷஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூப், சுஃபியான் முகீம், அப்ரார் அகமது, உஸ்மான் கான்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

பாகிஸ்தான் ஒருநாள் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் அலி ஆகா, அப்துல்லா ஷஃபீக், அப்ரார் அகமது, அகிஃப் ஜாவேத், பாபர் ஆசாம், ஃபஹீம் அஷ்ரப், இமாம் உல் ஹக், குஷ்தில் ஷா, முகமது அலி, முகமது வாசிம் ஜூனியர், இர்பான் நியாசி, நசீம் ஷா, சுஃபியான் முகீம், தயப் தாஹிர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News