South Africa tour Of Pakistan: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் தென் ஆப்பிரிக்க அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளது. 

Advertisement

டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் செப்டம்பர் 9 செவ்வாய் கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 10ஆம் தேதி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஐக்கிய அரபு அமீரக அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Advertisement

இந்த தொடரின் இறுதிப்போட்டியானது செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த தொடரை முடித்த கையோடு பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேலும் இந்த போட்டிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

அதேசமயம், இரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தொடர்களுக்கான அட்டவணையும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையிலும் லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து அக்டோபர் 20 முதல் 24ஆம் தேதி வரை இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கி நவம்பர் 1ஆம் தேதி வரையிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 4 முதல் 8ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிலும் குறிப்பாக இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஃபசிலாபாத்தில் உள்ள இக்பால் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஃபசிலாபாத் கிரிக்கெட் மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Also Read: LIVE Cricket Score
Advertisement

பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா போட்டி அட்டவணை

  • அக்டோபர் 12-16: முதல் டெஸ்ட், கடாஃபி மைதானம், லாகூர்
  • அக்டோபர் 20-24: இரண்டாவது டெஸ்ட், ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி
  • அக்டோபர் 28: முதல் டி20ஐ, ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி
  • அக்டோபர் 31: 2வது டி20ஐ, கடாபி மைதானம், லாகூர்
  • நவம்பர் 1: 3வது டி20ப, கடாபி மைதானம், லாகூர்
  • நவம்பர் 4: முதல் ஒருநாள் போட்டி, இக்பால் மைதானம், பைசலாபாத்
  • நவம்பர் 6: 2வது ஒருநாள் போட்டி, இக்பால் மைதானம், பைசலாபாத்
  • நவம்பர் 8: 3வது ஒருநாள் போட்டி, இக்பால் மைதானம், பைசலாபாத்

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News