பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கம்மின்ஸ் ரிட்டர்ன்ஸ்!

Updated: Mon, Oct 14 2024 10:19 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணி தற்சமயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியானது, நாளை இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. 

இதனையடுத்து பாகிஸ்தான் அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 04ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் இங்கிலாந்து தொடரின் போது ஓய்வில் இருந்த பாட் கம்மின்ஸ் மீண்டும் அணியில் இணைந்துள்ளதுடன், கேப்டனாகவும் செயல்படவுள்ளார். அவருடன் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்ட நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதுதவிர நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல் ஆகியோருடன் இளம் வீரரான ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், கூப்பர் கனொளி ஆகியோருக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா, ஆரோன் ஹார்டி உள்ளிட்டோரும் தங்கள் இடத்தை தக்கவைத்துள்ள நிலையில், மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், கூப்பர் கொனொலி, ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா.

Also Read: Funding To Save Test Cricket

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் தொடர் அட்டவணை

  • நவம்பர் 04- முதல் ஒருநாள் போட்டி - மெல்போர்ன்
  • நவம்பர் 08 - இரண்டாவது ஒருநாள் போட்டி - அடிலெய்ட்
  • நவம்பர் 10 - மூன்றாவது ஒருநாள் போட்டி - பெர்த்
  • நம்பவர் 14 - முதல் டி20 போட்டி - பிரிஸ்பேன்
  • நவம்பர் 16 - இரண்டாவது டி20 போட்டி - சிட்னி
  • நவம்பர் 18 - மூன்றாவது டி20 போட்டி - ஹாபர்ட்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை