BGT 2024: எட்டு வாரங்காள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுக்கும் பாட் கம்மின்ஸ்!

Updated: Sun, Aug 18 2024 13:12 IST
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க பார்டர் - கவாஸ் கோப்பை டெஸ்ட் தொடரானது இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. அதிலும் குறிப்பாக இம்முறை இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளன. மேற்கொண்டு இதில் ஒரு போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாகவும் நடபெறவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் எட்டு வாரங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்கவுள்ளதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்தாண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி பிரான்சைஸ் கிரிக்கெட் தொடர்களிலும் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார். அதன்படி, அஷஸ் தொடர், ஒருநாள் உலகக்கோப்பை தொடர், டி20 உலகக்கோப்பை மட்டுமின்றி இரு தரப்பு தொடர்களில் விளையாடியுள்ளார். 

அதனைத்தொடர்ந்து ஐபிஎல் தொடர், சமீபத்தில் நடந்து முடிந்த மேஜர் லீக் டி20 தொடர் உள்பட பிரான்சைஸ் தொடர்களிலும் விளையாடி வருகிறார். இதனால் தொடர்ச்சியாக கிரிக்கெட்டில் பங்கேற்றுவருதன் காரணமாக அவர் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு எதிர்வரும் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் இருந்தும் பாட் கம்மின்ஸிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து பேசிய பாட் கம்மின்ஸ், “ஒரு வாரம் ஜிம் பயிற்சிக்கு பிறகு இன்று நான் மிகவும் சோர்வாக உணர்கிறேன். என்னுடைய தொடை எலும்புகள், கணுக்கால் உள்ளிட்டவைகளில் வலியை உணர்கிறேன். ஏனெனில் நான் தொடர்ச்சியாக பல மாதங்கள் பந்துவீசுவதன் காரணமாக இப்பாடி இருக்கலாம். மேலும் ஒரு தொடருக்கு மத்தியில் இதுபோன்ற காரணங்களை காட்டி நீங்கள் வெளியேற முடியாது. 

இதனால் நான் தற்போது கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் வீரர்கள் கிரிக்கெட்டில் இருந்து சிறிய இடைவேளை பிறகு திரும்பி வந்து கொஞ்சம் புத்துணர்ச்சியுடன் இருப்பவர்கள். நான் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு முன்பு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்து இடைவிடாமல் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து பந்துவீசி வருகிறேன்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அதன் காரணமாக நான் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஏழு அல்லத்து எட்டு வாரங்கள் பந்துவீசுவதை தவிர்த்து, என் உடலுக்கு தேவையான ஓய்வை கொடுக்க விரும்புகிறேன். இதன் மூலம் என்னால் தொடர்ச்சியாக பந்துவீச முடிவதுடன், எனக்கு காயங்கள் ஏதும் ஏற்படால் தவிர்க்கவும் இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை