நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி அண்மையில் கலேவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இலங்கை அணி 63 ரன்கள் ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன்,  இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

Advertisement

மேற்கொண்டு இப்போட்டியில் வெற்றி பெற்றதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் இலங்கை அணியானது 50 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மூன்றாம் இடத்தில் இருந்த நியூசிலாந்து அணியோ 42 புள்ளிகளுடன் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. 

Advertisement

அதன்படி இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கலேவில் உள்ள கலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை அணி வெற்றிபெற்றால் தொடரை வெல்லும் என்பதாலும், நியூசிலாந்து அணி தொடர் இழப்பை தவிர்க்க போராடும் என்பதாலும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனால் இப்போட்டிக்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இலங்கை அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான விஸ்வா ஃபெர்னாண்டோ காயம் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர் விஸ்வா ஃபெர்னாண்டோவிற்கு காயம் ஏற்பட்டதாகவும், அவரது காயம் குணமடைய சில காலம் தேவை என்பதாலும் இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவருக்குப் பதிலாக இப்போட்டிக்கான இலங்கை அணியில் வலதுகை ஆஃப் ஸ்பின்னரான நிஷான் பெய்ரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதையும் உறுதிசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை டெஸ்ட் அணி: தனஞ்சய் டி சில்வா (கேப்டன்), திமுத் கருணாரத்ன, பதும் நிஷங்க, குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஓஷதா ஃபெர்னாண்டோ, அசிதா ஃபெர்னாண்டோ, நிஷான் பெய்ரிஸ், லஹிரு குமார, பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், ஜெப்ரி வான்டர்சே, மிலன் ரத்நாயக்க.

Advertisement

நியூசிலாந்து டெஸ்ட் அணி: டிம் சௌதீ (கே), டாம் பிளென்டல், மைக்கேல் பிரேஸ்வெல், டெவான் கான்வே, மேட் ஹென்றி, டாம் லேதம், டேரில் மிட்செல், வில்லியம் ஓ ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News