இந்திய அணியின் சிறந்த ஒருநாள் லெவனை தேர்வு செய்த பியூஷ் சாவ்லா; கேப்டனாக தோனி நியமனம்!

Updated: Fri, Sep 13 2024 11:19 IST
Image Source: Google

இந்தியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா. இவர் இந்திய அணிக்காக 2006ஆம் ஆண்டு அறிமுகமான பியூஷ் சாவ்லா இதுவரி 3 டெஸ்ட், 25 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேசமயம் ஐபிஎல் தொடரில் கடந்த 2008ஆம் ஆண்டில் இருது விளையாடி வரும் அவர் இதுவரை 192 போட்டிகளில் விளையாடி 192 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்திய வீரர்களை உள்ளடக்கிய தனது ஆல் டைம் சிறந்த ஒருநாள் அணியின் லெவனை பியூஷ் சாவ்லா தேர்வு செய்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரையும், இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவையும் சாவ்லா தேர்வு செய்துள்ளார். அதேசமயம் அவர் தனது மூன்றாவது நம்பர் பேட்ஸ்மேனாக முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கை தேர்வு செய்துள்ளார்.

அவருக்குப் பிறகு நான்காம் வரிசை வீரராக விராட் கோலியையும், 5ஆவது வரிசையில் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவாராஜ் சிங்கையும் தேர்வுசெய்துள்ள அவர், அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அணியின் கேப்டனாக முன்னள் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியைத் தேர்வு செய்துள்ளார். மேற்கொண்டு அணியின் மற்றொரு ஆல் ரவுண்டராக முன்னாள் கேப்டன் கபில் தேவிற்கு அவர் வாய்ப்பு கொடுத்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங்கை தேர்வு செய்துள்ள அவர், வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜாகீர் கானை தேர்வு செய்துள்ளது. அதேசமயம் பியூஷ் சாவ்லா தேர்வு செய்துள்ள இந்த அணியில் முன்னாள் ஜாம்பவான்கள் சௌரவ் கங்குலி, கௌதம் கம்பீர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

பியூஷ் சாவ்லா தேவு செய்த ஆல்-டைம் ஒருநாள் இந்திய லெவன்: சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, வீரேந்திர சேவாக், விராட் கோலி, யுவராஜ் சிங், எம்எஸ் தோனி (கேப்டன்), கபில்தேவ், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜாகீர் கான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை