இந்தியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா. இவர் இந்திய அணிக்காக 2006ஆம் ஆண்டு அறிமுகமான பியூஷ் சாவ்லா இதுவரி 3 டெஸ்ட், 25 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேசமயம் ஐபிஎல் தொடரில் கடந்த 2008ஆம் ஆண்டில் இருது விளையாடி வரும் அவர் இதுவரை 192 போட்டிகளில் விளையாடி 192 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

இந்நிலையில் தனது ஆல் டைம் சிறந்த ஐபிஎல் அணியின் லெவனை பியூஷ் சாவ்லா தேர்வு செய்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயிலை தேர்வு செய்த அவர், மூன்றாம் வரிசையில் விராட் கோலியையும், நான்காம் வரிசையில் சூர்யகுமார் யாதவையும் தேர்வு செய்துள்ளார். அதைத்தொடர்ந்து 5ஆவது இடத்திற்கு தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸை தேர்வு செய்துள்ளார். 

Advertisement

மேற்கொண்டு யுவராஜ் சிங் மற்றும் மகேந்திர சிங் தோனியைத் தேர்வு செய்துள்ள பியூஷ் சாவ்லா, பந்துவீச்சாளர்களாக வெஸ்ட் இண்டீஸின் சுனில் நரைன், இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் இலங்கை அணியின் லசித் மலிங்கா ஆகியோருக்கு இடமளித்துள்ளார். முன்னதாக பியூஷ் சாவ்லா தனது ஐபிஎல் லெவனின் நான்கு வெளிநாட்டு வீர்ர்களாக சுனில் நரைன், ஏபி டி வில்லியர்ஸ், மலிங்கா மற்றும் ரஷித் கான் ஆகியோரைத் தேர்வுசெய்தார். 

ஆனால் அவர் கிறிஸ் கெயிலிற்கு வாய்ப்பு வழங்கும் நோக்கி தனது அணியில் ரஷித் கானின் பெயரை நீக்கியதுடன், அவரை தொடக்க வீரராகவும் தேர்வு செய்தார். அதற்கு முன் ரோஹித் சர்மா, விராட் கோலியை தொடக்க வீரர்களாக தேர்வு செய்திருந்தார். மேற்கொண்டு இந்த லெவனில் தனது பெயரையும் முதலில் கூறிய பியூஷ் சாவ்லா அதன் பின் தனது பெயரை அந்த பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார். 

பியூஷ் சாவ்லா தேர்வு செய்த ஐபிஎல் லெவன்: ரோஹித் சர்மா, கிறிஸ் கெய்ல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஏபி டி வில்லியர்ஸ், யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, சுனில் நரைன், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, லசித் மலிங்கா.

பியூஷ் சாவ்லா தனது ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணியை தேர்வு செய்வதற்கு முன்பு, இந்திய அணியின் ஆல் டைம் ஒருநாள் லெவன் அணியையும் தேர்வு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியில், அவர் மகேந்திர சிங் தோனியை கேப்டனாக அறிவித்ததுடன், இந்திய ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், யுவராஜ் சிங், அனில் கும்ப்ளே மற்றும் ஜாகீர் கான் உள்ளிட்ட வீரர்களுக்கும் இடமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

பியூஷ் சாவ்லா தேவு செய்த ஆல்-டைம் ஒருநாள் இந்திய லெவன்: சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, வீரேந்திர சேவாக், விராட் கோலி, யுவராஜ் சிங், எம்எஸ் தோனி (கேப்டன்), கபில்தேவ், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜாகீர் கான்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News