Papua New Guinea vs Uganda Dream11 Prediction Match 9, ICC T20 World Cup 2024: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை மறுநாள் அதிகாலையில் நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள முன்னாள் பப்புவா நியூ கினி அணியை எதிர்கொண்டு ஊகாண்டா அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் பிஎன்ஜி அணியானது தங்களது முதல் போட்டியில் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் அணியை திணரவைத்ததுடன் போராடி தோல்வியைத் தழுவியது. அதேசமயம, உகாண்டா அணியானது முதல் போட்டியிலேயே ஆஃப்கானிடன் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

PNG vs UGA: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பப்புவா நியூ கினி vs உகாண்டா
  • இடம் - பிராவிடன்ஸ் மைதானம், கயானா
  • நேரம் - அதிகாலை 5 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

PNG vs UGA Pitch Report

பிராவிடன்ஸ் மைதானமானது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சமநிலைக்கு பெயர் போனது. இங்குள்ள மைதானமாது முதல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவகையில் வேகம் மற்றும் ஸ்விங்கிற்கு வழிவகுக்கும். அதன்பின் ஆட்டம் செல்ல செல்ல சுழற்பந்து வீச்சாளர்களாலும் தாக்கத்தை ஏறபடுத்த முடியும். ஒட்டுமொத்தமாக, இந்த மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக கருதப்படுகிறது, குறிப்பாக ஆடுகளத்தின் வேகம் குறையும் போது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரும் உதவியாக அமையும். இருப்பினும் களத்தில் நின்று விளையாடும் பேட்டர்களால் நிச்சயம் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் சேஸிங்கை தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

PNG vs UGA T20I Head to Head

  • மோதிய போட்டிகள் - 01
  • பப்புவா நியூ கினி - 01
  • உகாண்டா - 00
  • முடிவில்லை - 00

PNG vs UGA: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

Papua New Guinea vs Uganda Probable Playing XI

பப்புவா நியூ கினி: டோரி உரா, அசாத் வாலா (கேப்டன்), லெகா சியாகா, செசே பாவ், ஹிரி ஹிரி, சார்லஸ் அமினி, கிப்ளின் டோரிகா, சாத் சோப்பர், அலே நாவோ, கபுவா மோரியா, ஜான் கரிகோ.

Advertisement

உகாண்டா: ரவுனக் படேல், சைமன் செசஸ்ஸி, ரோஜர் முகாசா, ரியாசத் அலி ஷா, தினேஷ் நக்ரானி, அல்பேஷ் ரம்ஜானி, ராபின்சன் ஒபுயா, பிரையன் மசாபா (கே), பிலால் ஹுசைன், காஸ்மாஸ் கியிவுடா, ஹென்றி சென்சன்டோ.

PNG vs UGA T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - சைமன் செசஸ்ஸி, கிப்ளின் டோரிகா
  • பேட்ஸ்மேன் - ரியாசத் அலி ஷா
  • ஆல்-ரவுண்டர்கள் - சார்லஸ் அமினி, செசே பாவ் (துணை கேப்டன்), ஆசாத் வாலா (கேப்டன்), அல்பேஷ் ரம்ஜானி, பிரையன் மசாபா
  • பந்துவீச்சாளர்கள் - சாத் சோப்பர், அலி நாவோ, கோஸ்மாஸ் கியிவுடா.

PNG vs UGA Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match PNG vs UGA, PNG vs UGA Dream11 Team, Fantasy Cricket Tips, PNG vs UGA Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Papua New Guinea vs Uganda

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News