ZIM vs SA: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் டெவால்ட் பிரீவிஸ், லுவான் ட்ரே பிரிட்டோரியாஸுக்கு இடம்

Updated: Fri, Jun 06 2025 21:27 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி எதிர்வரும் ஜூன் 11ஆம் தேதி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 28ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 06ஆம் தேதியும் நடைபெறவுள்ளது, இந்த நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. 

அதன்படி இந்த அணியின் கேப்டனாக டெம்பா பவுமா தொடரும் நிலையில், நட்சத்திர வீரர்கள் காகிசோ ரபாடா, ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன், ரியான் ரிக்கெல்டன் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ், லெசெகோ செனோக்வானே, கோடி யூசுஃப், டெவால்ட் பிரீவிஸ் மற்றும் ப்ரீனெலன் சுப்ரயன் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர்த்து கேசவ் மஹாராஜ், குவேனா மபாகா, டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரைன் உள்ளிட்டோரும் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் டோனி டி ஸோர்ஸி, வியான் முல்டர், கார்பின் போஷ், சேனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன் உள்ளிட்டோருக்கு இந்த டெஸ்ட் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தென் ஆப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஸோர்ஸி, ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மஹராஜ், லுங்கி இங்கிடி, கார்பின் போஷ், கைல் வெர்ரைன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன்.

Also Read: LIVE Cricket Score

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் ப்ரீவிஸ், கார்பின் போஷ், டோனி டி சோர்ஜி, ஜுபைர் ஹம்சா, கேசவ் மஹாராஜ், குவேனா மபாகா, வியான் முல்டர், லுங்கி இங்கிடி, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், லெசெகோ செனோக்வானே, ப்ரீனெலன் சுப்ரயன், கைல் வெர்ரைன் மற்றும் கோடி யூசுஃப்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை