பாகிஸ்தானின் உள்ளூர் டி20 லீக் தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இன்று தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி, லாகூர் கலந்தர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய லாகூர கலந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஃபகர் ஸமான் - மிர்ஸா தாஹிர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் மிர்ஸா தாஹிர் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் 19 ரன்களிலும், காம்ரன் குலாம் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.

Advertisement

இதற்கிடையில் மற்றொரு தொடக்க வீரரான ஃபகர் ஸமான் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். பின் 42 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 66 ரன்களைச் சேர்த்த ஃபகர் ஸமான் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய சிக்கந்தர் ரஸா - ஹுசைன் தாலத் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் 20 ரன்களைச் சேர்த்திருந்த ஹுசைன் தாலத் ஆட்டமிழந்தார். இருப்பினும் கடைசி வரை களத்தில் இருந்த சிக்கந்தர் ரஸா 19 ரன்களைச் சேர்த்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லாகூர் கலந்தர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்தது. முல்தான் அணி தரப்புல் உசாமா மிர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News