பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பேஷவர் ஸால்மி அணி, இமாத் வாசிம் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.

Advertisement

கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பேஷாவர் ஸால்மி அணியில் தொடக்க வீரர் முகமது ஹாரிஸ் 10 ரன்களிலும், சாய்ம் அயூப் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் அசாம் - கொஹ்லர் காட்மோர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 68 ரன்களைச் சேர்த்திருந்த பாபர் ஆசம், இம்ரான் தாஹிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அவரைத் தொடந்து வந்த பனுகா ராஜபக்க்ஷாவும் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் காட்மோருடன் ஜோடி சேர்ந்த ஜிம்மி நீஷமும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொஹ்லர் காட்மோர் 50 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 92 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து, 8 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பேஷாவர் ஸால்மி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைக் குவித்தது. கராச்சி கிங்ஸ் தரப்பில் மிர் ஹம்சா, ஆண்ட்ரூ டை, பென் கட்டிங், இம்ரான் தாஹிர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News