எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisement

இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வாந்த ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளதால், அவர்களின் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற சந்தேகங்களும் அதிகரித்து வருகின்றன.

Advertisement

கேப்டன்சிக்கான தேர்வில் ஷுப்மன் கில், கேஎல் ராகுல் மற்றும் ஜஸ்பிரித் புமரா ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பணிச்சுமை மற்றும் உடற்தகுதி காரணங்களால் ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் வாய்ப்பி இருக்காது என்ற தகவல்கள் வெளியாகிவுள்ளன. மேற்கொண்டு பும்ராவும் அணியின் கேப்டன் பதவியை ஏற்கபோவதில்லை என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் ஷுப்மன் கில் தான் அணியின் அடுத்த கேப்டன் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் தற்போதைய டெஸ்ட் அணியில் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவர் என்றும், எனவே அவரை கேப்டன் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்றும் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறிவுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணி முற்றிலும் புதிய அணியாக இருக்கும், அதில் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் மூத்த வீரராக இருப்பார். எனவே அவர் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் நான் நினைக்கிறேன்" என்று கூறிவுள்ளார். 

Also Read: LIVE Cricket Score

தற்போது 31 வயதான ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் அணியின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது, அவர் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இதுதவிர்த்து அவர் 45 டெஸ்ட், 89 ஒருநாள் மற்றும் 70 டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு விளையாடிய அனுபவத்தையும் பெற்றுள்ளார். இதனால்தான் ரோஹித் சர்மாவின் ஓய்வுக்குப் பிறகு, இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக பும்ரா நல்ல தேர்வாக இருப்பார் என்று அஸ்வின் நம்புகிறார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News