வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்றுவரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. இத்தொடரில் ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியானது குரூப் சி பிரிவில் இடம்பிடித்திருந்தது. அதன்படி இத்தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை ஈட்டியுள்ளது.
இந்த வெற்றிகளின் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி ஆஃப்கானிஸ்தான் அணி அசத்தியுள்ளது. இதனால் சூப்பர் 8 சுற்றிலும் ஆஃப்கானிஸ்தான் அணி தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் உகாண்டா அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் விளையாடிய முஜீப் உர் ரஹ்மான், காயம் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளைத் தவறவிட்டார். இதனையடுத்து அவர் உலகக்கோப்பை தொடரிலிருந்தும் விலகியுள்ளதாக ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அவருக்கு மாற்று வீரராக அதிரடி தொடக்க வீரர் ஹஸ்ரதுல்லா ஸஸாய் ஆஃப்கானிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணியில் ஹஸ்ரதுல்லா ஸஸாய் சேர்க்கப்பட்டிருப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டியில் ஹஸ்ரதுல்லா ஸஸாய் அணியில் இடம்பிடிப்பார். சர்வதேச டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் அதிக பட்ச தனிநபர் ஸ்கோரை பதிவுசெய்து அசத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆஃஃப்கானிஸ்தான் அணி: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், அஸ்மத்துல்லா ஒமர்சாய், நஜிபுல்லா ஸத்ரான், முகமது இஷாக், முகமது நபி, குல்பதின் நைப், கரீம் ஜனத், ரஷித் கான் (கேப்டன்), நங்யால் கரோட்டி, ஹஸ்ரத்துல்லா ஸசாய், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபாரூக்கி, ஃபரீத் அகமது மாலிக்
ரிஸர்வ் வீரர்கள்: செதிக் அடல், சலீம் சஃபி