கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் மகாராஜா கோப்பை எனும் டி20 தொடர் நடத்தப்படு வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் - மைசூர் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் தொடங்கும் முன் மழை நீடித்ததன் காரணமாக இப்போட்டியானது 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய மைசூர் வாரியர்ஸ் அணியானது ஹர்ஷில் தரமணி மற்றும் மனோஜ் பாண்டே ஆகியோரது அரைசதத்தின் மூலம் 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மனோஜ் பாண்டே 58 ரன்களையும், ஹர்ஷில் தரமணி 50 ரன்களையும் சேர்த்தனர். பெங்களூரு அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நவீன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடி பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியானது புவன் ராஜு, சுரர் அவுஜா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 17.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் மைசூர் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக புவன் ராஜு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் அடித்த சிக்ஸர் குறித்த காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி மைசூர் வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய சமித், இன்னிங்ஸின் ஏழாவது ஓவரில் எதிரணி வேகப்பந்து வீச்சாளர் கணேஷ்வர் நவீனின் பந்துவீச்சில் அபாரமான சிக்ஸர் அடித்தார்.

இந்த சிக்சரைப் பார்க்கும்போது அவர் நீண்ட இன்னிங்ஸ் விளையாடுவார் என்று தோன்றியது. ஆனால் அடுத்த பந்திலேயே சமித் தனது விக்கெட்டை இழந்தார். சமித் ஏழு பந்துகளில் ஏழு ரன்கள் எடுத்திருந்த நிலையில், நவீன் பந்துவீச்சிலேயே விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் சமீத் டிராவிட் அடித்த சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலானாலும், இந்த சிக்ஸருக்குப் பிறகு சமித் தனது விக்கெட்டை இழந்ததற்காக ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டார் என்பது  குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News