Samit dravid
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி அறிவிப்பு; சமித் டிராவிட்டிற்கு இடம்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அண்டர்19 கிரிக்கெட் அணியானது இந்திய அண்டர்19 அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், இரண்டு நான்கு நாள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது செப்டம்பர் 21ஆம் தேதியும், நான்கு நாள் தொடரானது செப்டம்பர் 30ஆம் தேதியும் தொடங்கவுள்ளது.
மேலும் இத்தொடரின் ஒருநாள் போட்டிகள் அனைத்தும் புதுச்சேரியிலும், நான்கு நாள் போட்டிகள் அனைத்தும் சென்னையில் நடைபெறும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனையடுத்து இத்தொடர்களுக்கான இந்திய அண்டர் 19அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அத்னபடி, உத்திரபிரதேச வீரர் முகமது அமான் ஒருநாள் அணிக்கும், மத்தியபிரதேச வீரர் சோஹம் பட்வர்தன் நான்கு நாள் அணிக்கும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Related Cricket News on Samit dravid
-
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சுமித் டிராவிட் விளாசிய சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
மகாராஜா கோப்பை தொடரில் மைசூர் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ராகுல் டிராவிட்டின் மகன் சுமித் விளாசிய சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மகனுக்கு பயிற்சியளிக்க முடியாது என்று நினைக்கிறேன் - ராகுல் டிராவிட்!
எனது மகனுக்கு மட்டும் என்னால் கிரிக்கெட் பயிற்சியை அளிக்க முடியாது என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
டிராவிட்டை ஜெராக்ஸ் எடுத்த சுமித் டிராவிட்; வைரல் காணொளி!
கூர் பெஹார் கோப்பை தொடரில் கர்நாடக அணிக்காக விளையாடி வரும் சுமித் டிராவிட் 98 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47