இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று ரஞ்சி கோப்பை தொடர். இத்தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று வரும் 5ஆவது சுற்று ஆட்டத்தில் எலைட் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் ரயில்வேஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ரயில்வேஸ் அணியில் கேப்டன் பிரதாம் சிங் ஒரு ரன்னிலும், விவேக் சிங் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய சுராஜ் அவுஜா 52, சைஃப் 6, மெராய் 53 ரன்களைச் சேர்க்க ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்ஸில் 229 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் அஜித் ராம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணிக்கு ஷாருக் கான் - ஜெகதீசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின் 86 ரன்களில் ஷாருக் கானும், 56 ரன்னில் ஜெகதீசனும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் 11 ரன்களுக்கும், பிரதோஷ் பால் 38 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த ஆண்ட்ரே சித்தார்த் - முகமது அலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்தனர். இதில் சித்தார்த் 78 ரன்களுக்கும், முகமது அலி 91 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். இதனால் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்களைக் குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 

பின்னர் 209 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய ரயில்வேஸ் அணியில் விவேக் சிங் 63 ரன்களையும், சுராஜ் அவுஜா 36 ரன்களையும், முகமது சைஃப் 52 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் ரயில்வேஸ் அணி 184 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் அஜித் ராம், சோனு யாதவ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதன்மூலம் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் ரயில்ஸ்வேஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது அலி ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு அணி குரூப் டி பிரிவுக்கான புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News