இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று ரஞ்சி கோப்பை தொடர். இத்தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் எலைட் சீ பிரிவில் இடம்பிடித்துள்ள பெங்கால் மற்றும் மத்திய பிரதேச அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதற்கு காரணம் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.

Advertisement

கடந்தாண்டு இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி, அத்தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்தடுத்த தொடர்களை தவறவிட்டார். பின்னர் தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் இருந்து விலகியது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் தள்ளியது. இதனால் அவர் எப்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்ற கேள்வியும் எழுந்தது. 

Advertisement

பின்னர் வங்கதேச தொடர், நியூசிலாந்து தொடர் என தவறவிட்ட முகமது ஷமி அடுத்ததாக நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடிக்காமல் தவறவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்திருந்த நிலையில் தான், மத்திய பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் முகமது ஷமி களமிறங்கினார். 

அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், மத்திய பிரதேச அணியை 167 ரன்களிலேயே சுருட்டியது. இதற்கு முக்கிய காரணமாக முகமது ஷமி விளங்கினார். ஏனெனில் இப்போட்டியில் 19 ஓவர்கள் பந்துவீசிய முகமது ஷமி அதில் 4 மெய்டன் ஓவர்களை வீசியதோடு 54 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

 

கிட்டத்திட்ட ஓராண்டுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் முகமது ஷமி, தான் விளையாடிய முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளது ரசிகர்களுக்கு மட்டுமின்றி இந்திய அணிக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக மாறியுள்ளது. இதனால் ஷமி முழு உடற்த்குதியுடன் இருக்கும் பட்சத்தில் நடைபெறவுள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரிலேயே முகமது ஷமி தனது கம்பேக்கை கொடுப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

Advertisement

மேற்கொண்டு ரஞ்சி கோப்பையில் முகமது சமி சிறப்பாக விளையாடினால் எதிவரும் ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலத்திலும் அவரை ஏலம் எடுக்க ஒவ்வொரு அணிகளும் போட்டி போடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் முகமது ஷமி விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ள நிலையில் அக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News