அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 43 ரன்கள் அடித்தார். வங்கதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Advertisement

இதனையடுத்து 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி, ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான தன்ஸித் ஹசன் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் டக் அவுட்டிலும், கேப்டன் ஷண்டோ 5 ரன்களிலும், சவுமியா சர்கார் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். இதனிடையே 2 முறை மழை குறுக்கிட்ட காரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் வங்கதேச அணிக்கு 19 ஓவர்களில் 114 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

Advertisement

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் நிலைத்து விளையாடி அணியை இலக்கை நோக்கி நெருங்க வைத்தார். அரை சதம் அடித்து அசத்திய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து போராடியும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. இதனால் வங்கதேச அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரஷீத் கான் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர்.

இந்நிலையில் இப்போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதன்படி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீர்ர் மற்றும் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். முன்னதாக நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதீ அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 162 ரன்களுடன் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்

  • 164 விக்கெட்டுகள் - டிம் சௌதீ (நியூசிலாந்து)
  • 152 விக்கெட்டுகள் - ரஷித் கான் (ஆஃப்கானிஸ்தான்)
  • 149 விக்கெட்டுகள் - ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்)
  • 138 விக்கெட்டுகள் - இஷ் சோதி (நியூசிலாந்து)
  • 128 விக்கெட்டுகள் - முஸ்தாஃபிசூர் ரஹ்மான் (வங்கதேசம்)
  • 122 விக்கெட்டுகள் - மார்க் அதிர் (அயர்லாந்து)

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News