இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் முகமது பந்து வீச்சை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர்.

Advertisement

அதன்படி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்களுக்கும், ஷுப்மன் கில் ரன்கள் ஏதுமின்றியும், விராட் கோலி 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஹ்சன் மஹ்மூத் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த ஜெய்ஸ்வால் - ரிஷப் பந்த் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரிஷப் பந்த் 39 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 56 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து கேல் ராகுலும் 16 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில் ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுபக்கம் ரவீந்திர ஜடேஜாவும் அரைசதம் கடந்து விளையாடி வருகிரார். இதன்மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது. இதில் அஸ்வின் 102 ரங்களுடனும், ஜடேஜா 86 ரங்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேசம் சார்பில் ஹாசன் மஹ்மூத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

சர்வதேச அளவில் முதல் வீரர்

இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் சில் சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். அதன்படி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட இன்னிங்ஸ்களில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஐம்பது மற்றும் 5 விக்கெட்டுகளை எடுத்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில்  14 அரை சதங்கள் மற்றும் 6 சதங்களை அடித்துள்ளார், அதே நேரத்தில் அவர் பந்துவீச்சில் 36 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தோனியை சமன் செய்த அஸ்வின்

Advertisement

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் அடிக்கும் 6ஆவது சதம் இதுவாகும். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதங்களை அடித்த 14ஆவது வீரர் எனும் பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். மேற்கொண்டு அவர் இந்த இடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, மன்சூர் அலி கான் பட்டோடி ஆகியோரும் தலா 6 சதங்களைப் பதிவுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News