Ravichandran Ashwin's India's Playing XI England 1st Test: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார்.

Advertisement

ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நாளை இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன. இதில் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த கணிப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பிளேயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார்.

Advertisement

தனது யூட்யூப் காணொளி வாயிலாக அஸ்வின் தனது பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கேஎல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள், சாய் சுதர்ஷன் நம்பர்-3 இல் விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். அவர்களைத் தொடர்ந்து கேப்ட்ன் ஷுப்மான் கில் நான்காவது இடத்திலும், ரிஷப் பந்த் 5அம் இடத்திலும், கருண் நாயர் 6ஆவது இடத்திலும் விளையாடுவார்கள்.

கருண் நாயர் ஐந்தாம் இடத்தில் விளையாடுவார் என்பதை யாரும் சொல்லவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் 6ஆம் இடத்தில் கருண் நாயர் அல்லது துருவ் ஜூரெல் விளையாடுவர்கள் என்று என்று நினைக்கிறேன். ஏனெனில் நாம் கருண் நாயரின் ஃபார்மை புறக்கணிக்க முடியாது. அதேசமயம் துருவ் ஜூரெலும் இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதனால் அந்த இடத்தில் கருண் நாயர் அல்லது துருவ் ஜூரெல் விளையாட வாய்ப்பு உள்ளது.

இதுதவிருத்து அணியில் ஆல் ரவுண்டர்களாக 7ஆவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா, எட்டாவது இடத்தில் ஷர்துல் தாக்கூர் ஆகியோரும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இருப்பார்கள்” என்று கூறியுள்ளார். இருப்பினும் அஸ்வின் தனது அணியில் குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் மற்றும் நிதீஷ் ரெட்டி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: LIVE Cricket Score

Advertisement

ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுத்த இந்திய அணியின் பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில், ரிஷப் பந்த், கருண் நாயர்/துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News