இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணியானது இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன, 2-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Advertisement

அதிலும் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் தொடரையும் 2-0 என இழந்தது. இதனையடுத்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 01ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணிக்காக விளையாடும் ரவீந்திர ஜடேஜா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி, இந்தப் போட்டியில் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினால், இஷாந்த் சர்மா மற்றும் ஜாகீர் கான் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடிப்பார்.

ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்காக இதுவரை 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 144 இன்னிங்ஸ்களில் 309 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் இஷாந்த் சர்மா 105 டெஸ்டில் 188 இன்னிங்ஸ்களில் விளையாடி 311 விக்கெட்டுகளையும், ஜாகீர் கான் 92 டெஸ்டில் 165 இன்னிங்ஸ்களில் விளையாடி 311 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளனர். 

இது தவிர ரவீந்திர ஜடேஜா பேட்டிங் 34 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் குண்டப்பா விஸ்வநாத்தை பின்னுக்கு தள்ளி 22ஆவது இடத்தை பிடிப்பார். அந்தவகையில் ரவீந்திர ஜடேஜா இதுவரை இந்திய அணிக்காக மூன்று வடிவங்களிலும் சேர்த்து இந்திய அணிக்காக 347 போட்டிகளில் விளையாடி 6,486 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் குண்டப்பா விஸ்வநாத் 116 போட்டிகளில் விளையாடி 6,519 ரன்களை எடுத்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்திய டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், அக்ஷர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, துருவ் ஜூரல், கேஎல் ராகுல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News