SA vs PAK, 2nd T20I: சதமடித்து சாதனை படைத்த ரீஸா ஹென்றிக்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவ்து டி20 போட்டி செஞ்சுரியனில் நேற்று நடைபெறறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி சைம் அயூப்பில் அதிரடியான ஆட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் சைம் அயூப் 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 98 ரன்களை எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தவிர்த்து பாபர் அசாம் 31 ரன்களையும், இர்ஃபான் கான் 30 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அறிமுக வீரர் தயான் கலீம் மற்றும் ஓட்னீல் பார்ட்மேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.
இதில் தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் 2 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய மேத்யூ பிரிட்ஸ்கீ 12 ரன்னிலும் விக்கெட்டை இழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான ரீஸா ஹென்றிக்ஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்தார். பின் 10 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் 117 ரன்களை எடுத்த நிலையில் ஹென்றிக்ஸ் விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை களத்தில் இருந்த வான்டெர் டுசன் 66 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய ரீஸ ஹென்றிக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய ரீஸா ஹென்றிக்ஸ் சாதனை ஒன்றையும் படைத்து அசத்தியுள்ளார்.
அதன்படி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை ரீஸா ஹென்ட்ரிக்ஸ் படைத்துள்ளார். இப்போட்டியில் அவர் தனது 18ஆவது அரைசதம் பிளஸ் (1 சதம் மற்றும் 17 அரை சதம்) ஸ்கோரை பதிவுசெய்திருந்தார். இதன்மூலம் குயின்டன் டி காக் (17 ஐம்பது +ஸ்கோரை) பின்னுக்கு தள்ளி ரீஸா ஹென்றிக்ஸ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இதுதவிர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் (முழு உறுப்பினர் நாடு) சேஸிங் செய்யும் போது அதிக ரன்களை அடித்த வீரர்கள் அடிப்படையில் சூர்யகுமார் யாதவ், ரிச்சர்ட் லெவி ஆகியோரின் சாதனையை ஹென்ட்ரிக்ஸ் சமன் செய்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், 2022 இல் இங்கிலாந்துக்கு எதிராகவும், தென் ஆப்பிரிக்காவின் ரிச்சர்ட் லெவி 2012ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராகவும் சேஸிங்கின் போது 117 ரன்களைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
டி20 போட்டிகளில் சேஸிங் செய்யும் போது அதிக தனிநபர் ஸ்கோரை குவித்த வீரர்கள் (முழு உறுப்பினர் நாடு)
- 125* - எவின் லூயிஸ் v இந்தியா,2017
- 122 - பாபர் அசாம் v தென் ஆப்பிரிக்கா,2022
- 117* - ரிச்சர்ட் லெவி v நியூசிலாந்து2012
- 117 - சூர்யகுமார் v இங்கிலாந்து2022
- 117-ரீசா ஹென்ட்ரிக்ஸ்வி v பாகிஸ்தான்2024*
- 116 - அலெக்ஸ் ஹேல்ஸ் v இலங்கை,2014