Rishabh Pant Reords: ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இங்கிலாந்து வீரர் ஒல்லி போப்பின் கேட்சை பிடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 150 கேட்சுகளை பூர்த்தி செய்துள்ளார். 

Advertisement

ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ், டங்க் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

Advertisement

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 62 ரன்களிலும், ஒல்லி போப்106 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, ஹாரி புரூக் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகிறார். இந்நிலையில் இப்போட்டியின் ரிஷப் பந்த் இங்கிலாந்து வீரர் ஒல்லி போப்பின் கேட்சை பிடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 150ஆவது கேட்ச்சைப் பிடித்து அசத்தி இருந்தார். 

இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட கேட்சுகளை எடுத்த இந்தியாவின் மூன்றாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் முன்னாள் வீரர் சையத் கிர்மானி ஆகியோர் மட்டுமே இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளனர். இதில் எம் எஸ் தோனி மட்டுமே 250க்கும் அதிகமான கேட்சுகளை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்சுகளை பிடித்த ஒரு இந்திய விக்கெட் கீப்பர்கள்

  • 256 - எம்.எஸ். தோனி
  • 160 - சையத் கிர்மானி
  • 150* - ரிஷப் பந்த்
  • 110 - கிரண் மோர்
  • 99 - நயன் மோங்கியா

முன்னதக இந்த போட்டியில் ரிஷப் பந்த் பேட்டிங்கிலும் ஒரு முக்கிய பங்களிப்பை வழங்கியதுடன் சாதனைப் படைத்திருந்தார். அதன்படி இதில் ரிஷப் பந்த் 178 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 134 ரன்கள் எடுத்ததுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தையும் பதிவுசெய்தார். இதன்மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த விக்கெட் கீப்பர் எனும் சாதனையையும் அவர் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்கு, ஷோயப் பஷீர்.

Also Read: LIVE Cricket Score

இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News