இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டாக எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வரும் அவர், தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

Advertisement

அவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் போது தான் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட் விக்கெட் கீப்பர்கள் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை ரிஷப் பந்த் செய்து காட்டியுள்ளார் என்று அவரை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.

Advertisement

இது குறித்து பேசிய அவர், “ரிஷப் பந்த் தற்போது உள்ள பல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். ஏனெனில் கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் பேட்டிங் செய்து வரும் விதம் நன்றாக இருக்கிறது. பொதுவாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் விளையாடுவது போன்று இல்லாமல் அதிரடியான இன்னிங்ஸை அவர் விளையாடி வருகிறார்.

எந்த வகையான கிரிக்கெட் போட்டிகளாக இருந்தாலும் சரி, அணி சிக்கலில் இருக்கும் போது அவருடைய தைரியமான அதிரடியான ஆட்டம் வெற்றிக்கு காரணமாகவும் இருந்து வருகிறது. அவரின் இந்த செயல்பாடு உலகில் உள்ள மற்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு உத்வேகத்தை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது” என பாராட்டியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News