வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பந்து விளையாடுவது சந்தேகம்!

Updated: Mon, Sep 22 2025 21:26 IST
Image Source: Google

இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றியைப் பதிவு செய்ததுடன், 2-2 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்தன. மேலும் இத்தொடரில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில், ஹாரி புரூக் ஆகியோர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.  

இதனையடுத்து இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் அக்டோபர் 2ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதேசமயம் இந்திய அணியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் ரிஷப் பந்து விளையாட மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இங்கிலாந்து தொடரின் போது ரிஷப் பந்த் கால் விரலில் காயத்தை சந்தித்தார். இதனால் அந்த தொடரின் கடைசி போட்டியில் இருந்து விலகிய அவர், காயத்திற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் அவரது காயம் இன்னும் குணமடையவில்லை.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பந்த் இடம்பெற மாட்டார் என்று கூறப்படுகிறது. ரிஷப் பந்த் இல்லாத சூழலில் துருவ் ஜூரெல் அணியில் விக்கெட் கீப்பராக இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழக வீரர் நாரயணன் ஜெகதீசனுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இருவரும் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டுள்ள்னர். 

Also Read: LIVE Cricket Score

அவர்களுடன் ஸ்ரேயாஸ் ஐயரும் டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, தேவ்தத் படிக்கல், சர்ஃப்ராஸ் கான், கருண் நாயர் உள்ளிட்டோரும் டெஸ்ட் அணியில் தங்கள் இடங்களை தக்கவைப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை