இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. அந்தவகையில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இந்த தொடரின் முதல் போட்டி வரும் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.

Advertisement

இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் பழைய பெர்த் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தற்போது இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போதுவரை ஆஸ்திரேலியா செல்லவில்லை. மேலும் இத்தொடரில் ஏதேனும் ஒரு போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின.

Advertisement

இதனால் ரோஹித் சர்மா பங்கேற்காத போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ரோஹித் சர்மா அணியில் இல்லாத பட்சத்தில் அவரது தொடக்க வீரர் இடத்தை அபிமன்யூ ஈஸ்வரன் அல்லத் கேஎல் ராகுல் ஆகியோர் நிரப்புவார்கள் என்றும் கூறப்பட்டன. இந்நிலையில் தான் ரோஹித் சர்மா குறித்து மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 

அதன்படி ரோஹித் சர்மா - ரித்திகா சஜ்தே தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த செய்தியானது இணையத்தில் காட்டுத்தீ போல் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. இருப்பினும் இந்த செய்தி குறித்து ரோஹித் சர்மா தரப்பிலோ அல்லது ரித்திகா தரப்பிலோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

முன்னதாக ரோஹித் சர்மா தனது குழந்தை பிறப்பின் காரணமாகவே ஆஸ்திரேலிய தொடரில் ஏதேனும் ஓரு போட்டியில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் கூடிய விரைவில் ஆஸ்திரேலியா சென்று இந்திய அணியுடன் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News