வலைப்பயிற்சியை தொடங்கினார் கேப்டன் ரோஹித் சர்மா.

Updated: Mon, Jul 04 2022 13:09 IST
Rohit Sharma Available For England White Ball Series After Getting Tested Covid Negative (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இந்த பயணத்தில் இரு அணிகளும் விளையாடுகின்றன. 

கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெஸ்ட் போட்டி தொடங்கியது. இருப்பினும் கரோனா தொற்று கண்டறியப்பட்ட காரணத்தால் கேப்டன் ரோஹித் சர்மா இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக அணியை பும்ரா வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ரோஹித்துக்கு மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. நோய் தொற்றிலிருந்து மீண்ட நிலையில் அவர் வலைப்பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இப்போது அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இதன் மூலம் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் அவர் இந்திய அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வரவு இந்திய அணிக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. வரும் 7ஆம் தேதி டி20 தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை