Captain rohit sharma
வேகமாக ரன்கள் குவிக்க வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது - ரோஹித் சர்மா!
கான்பூரில் நடைபெற்ற இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 233 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 34.4 ஓவர்களில் 285 ரன்களைக் குவித்ததுடன் இன்னிங்ஸையும் டிக்ளர் செய்தது.
அதன்பின் 52 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 95 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Related Cricket News on Captain rohit sharma
-
நாக்பூரில் சதமடித்தது எப்படி- மனம் திறந்த ரோஹித் சர்மா!
நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் பேட்டிங்கில் சொதப்பிய நிலையில், அபாரமாக சதமடித்த ரோஹித் சர்மா, அவரது பேட்டிங் உத்தியை தெரிவித்துள்ளார். ...
-
போட்டி நேரம் குறித்த அஸ்வினின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ரோஹித் சர்மா!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்ற ரவிச்சந்திரன் அஸ்வினின் கோரிக்கைக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆதரவுக்குரல் எழுப்பியுள்ளார். ...
-
வலைப்பயிற்சியை தொடங்கினார் கேப்டன் ரோஹித் சர்மா.
கரோனா தொற்று பாதிப்பில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டுள்ள நிலையில் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளார். ...
-
ENG vs IND: ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24