விராட் கோலி, ஷிகர் தவான் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்களையும், ஷிவம் தூபே 50 ரன்களையும், அறிமுக வீரர் ஆயூஷ் மாத்ரே 32 ரன்களையும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரியான் ரிக்கெல்டன் 24 ரன்களில் ஆட்டமிழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஹித் சர்மா 77 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் தொடர்கிறது. மேலும் இப்போட்டியில் மும்பை அணி வெற்றிக்கு காரணமாக அமைந்த ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றதுடன், சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார்.
விராட் கோலியின் சாதனை முறியடிப்பு
அதன்படி இப்போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வீரர் என்ம் சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தலா 19 முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருந்த நிலையில் தற்போது ரோஹித் சர்மா 20ஆவது முறை இந்த விருதை வென்று சாதனை படைத்துள்ளார். அதேசமாயம் ஒட்டுமொத்தமாக இந்த பட்டியலில் ஏபி டி வில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார்.
அதிக ஆட்டநாயகன் விருதுகள்
- 25 - ஏபி டெவிலியர்ஸ்
- 22 - கிறிஸ் கெய்ல்
- 19- விராட் கோலி*
- 19 - ரோஹித் சர்மா
- 18 - டேவிட் வார்னர்
- 18 - எம்எஸ் தோனி
ஷிகர் தவானின் சாதனையும் முறியடிப்பு
மேற்கொண்டு ரோஹித் சர்மா இப்போட்டியில் 76 ரன்களை எடுத்ததன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்களை எடுத்த இரண்டாவது வீரர் எனும் சாதனையை படைத்துள்லார். முன்னதாக ஷிகர் தவானை 221 இன்னிங்ஸ்களில் 6769 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது ரோஹித் சர்மா 6786 ரன்களை எடுத்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலி 8326 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்
- விராட் கோலி - 8326 ரன்கள்
- ரோஹித் சர்மா - 6769 ரன்கள்
- ஷிகர் தவான் - 6786 ரன்கள்
- டேவிட் வார்னர் - 6565 ரன்கள்
- சுரேஷ் ரெய்னா - 5528 ரன்கள்