ஐசிசி 2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 8ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 49.3 ஓவரில் 199 ரன்களுக்கு சுருண்டது.

Advertisement

அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் டேவிட் வார்னர் 41 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 46 (71) ரன்களும் எடுக்க பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் களையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா, இசான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயர் என டாப் 3 பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஹேசல்வுட், ஸ்டார்க் வேகத்தில் டக் அவுட்டாகி மெகா பின்னடைவை கொடுத்தனர்.

Advertisement

அதனால் 2/3 என்ற படுமோசமான துவக்கத்தை பெற்ற திண்டாடிய இந்தியா தோல்வியை சந்திப்பது உறுதி என்று ரசிகர்கள் கவலையடைந்த போது மிடில் ஆடரில் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். நேரம் செல்ல செல்ல நம்புறமாக செயல்பட்ட இந்த ஜோடியில் விராட் கோலி 85 ரன்களும், கேல் ராகுல் 97 ரன்களும் எடுத்து 41.2 ஓவரிலேயே இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் போராடி அசாத்தியமான வெற்றி காண வைத்தனர்.

இந்நிலையில் இந்நிலையில் மோசமான துவக்கத்தை பதற்றமடைந்ததாக கேப்டன் ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் காப்பாற்றிய ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரை பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “ஆரம்பத்தில் சரிந்தும் வெற்றி கண்டது ஆவலை கொடுத்துள்ளது. உலக கோப்பையின் துவக்கத்திலேயே இது எங்களுக்கு நல்ல போட்டியாக இருந்தது.

குறிப்பாக வெப்பமான சூழ்நிலையில் அனைவரும் சிறப்பாக ஃபீல்டிங் செய்து இந்த வெற்றி அபாரமானது. மேலும் எங்களுடைய பவுலர்கள் சூழ்நிலையை சரியாக பயன்படுத்தி ஒன்றாக சேர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் நான் ஆரம்பத்திலேயே அவுட்டானதும் பதற்றமடைந்து விட்டேன். ஏனெனில் நீங்கள் இது போன்ற தொடக்கத்தை விரும்ப மாட்டீர்கள். எனவே நீங்கள் ஆஸ்திரேலியாவின் பவுலர்களுக்கு பாராட்டுகளை கொடுக்க வேண்டும்.

இது போன்ற சிறிய இலக்கை கட்டுப்படுத்த நீங்கள் பவர் பிளேவில் நிறைய விக்கெட் எடுக்க வேண்டும். இருப்பினும் ராகுல் மற்றும் விராட் ஆகியோருக்கு நீங்கள் பாராட்டு தெரிவிக்க வேண்டும். குறிப்பாக அவர்கள் சேசிங் செய்த விதத்திற்கு தலை வணங்குகிறேன். இப்படி பல்வேறு வகையான சூழ்நிலைகளுக்கு ஏற்ப விளையாடுவதே எங்களுக்கு காத்திருக்கும் சவாலாகும்” என்று கூறியுள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News