இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. முதல் போட்டி ஜெய்பூரிலும் இரண்டாவது போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி இன்று மாலை கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

Advertisement

டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தோற்ற பின்னர், இந்தியா- நியூசிலாந்து டி20 தொடர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. முதல் இரண்டு போட்டியில் வென்றதால் இந்தத் தொடரை இந்திய அணி ஏற்கெனவே வென்றுவிட்டது. உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஏற்பட்ட காயத்தை இந்த டி20 தொடரின் வெற்றி சற்று ஆறுதலாய் அமைந்திருக்கிறது. 

Advertisement

குறிப்பாக புதிய கேப்டன் ஆக ரோஹித் சர்மா பதவியேற்ற முதல் தொடரிலேயே வெற்றி என்னும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். கேப்டன் பொறுப்பில் மட்டுமல்லாது ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் தனி முத்திரை பதித்துள்ளார் ரோஹித் சர்மா.

இந்தியா- நியூசிலாந்து தொடரின் நடந்து முடிந்த இரு போட்டிகளில் முறையே 48 மற்றும் 55 ரன்கள் குவித்துள்ளார் ரோகித் சர்மா. இந்த இரு போட்டிகளில் ரோகித் கணிசமான ரன்கள் குவிக்க தற்போது டி20 முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை முறியடிப்பதற்காகத் தயாராகி உள்ளார். 

சமீபத்திய இரு போட்டிகளிலும் சேர்த்து ரோகித் அடித்த 103 ரன்கள் உடன் தனது டி20 கிரிக்கெட் பயணத்தில் 3,141 ரன்களைக் குவித்த பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார் ரோஹித்.

ரோஹித் சர்மா இதுவரையில் தனது டி20 கிரிக்கெட் பயணத்தில் 118 போட்டிகளில் விளையாடி 3,141 ரன்களை அடித்துள்ளார். முன்னாள் டி20 கேப்டன் ஆன விராட் கோலி இதுவரையில் டி20 போட்டிகளில் விளையாடி 3,227 ரன்களை அடித்துள்ளார். ஆக, இன்னும் 87 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் கோலியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துவிடுவார்.

Advertisement

இந்தியா- நியூசிலாந்து மோதிய 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் இதுவரையிலான தனது டி20 கிரிக்கெட் பயணத்தில் 3,248 அடித்து தற்போது கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். கப்டில் இதுவரையில் 107 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: T20 World Cup 2021

டி20 தொடரில் இன்று மூன்றாவது போட்டி நடைபெற உள்ளதால் ரோகித் சர்மா இன்னமும் அதிக ரன்களைக் குவித்து கோலியின் சாதனையை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News