ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

Advertisement

இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவரைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் இரண்டாம் இடத்தில் தொடரும் நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளர். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசென், இந்திய அணியின் விராட் கோலி ஆகியோர் தலா ஒரு பின் தங்கியுள்ளனர். 

Advertisement

அவர்களைத் தொடர்ந்து நீயூசிலாந்தின் டேரில் மிட்செல் 6ஆம் இடத்திற்கு முன்னேறிய நிலையில், அயர்லாந்தின் ஹேரி டெக்டர் 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து எட்டாவது இடத்தில் நீடிக்கும் நிலையில், நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா 14 இடங்கள் முன்னேறி 14ஆம் இடத்தை பிடித்துள்ளார். இதன் காரணமாக கேஎல் ராகுல் ஒரு இடம் பின் தங்கி 15ஆம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷ்னா முதலிடத்தில் தொடரும் நிலையில், நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் 6 இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்திற்கும், இந்திய அணியின் குல்தீப் யாதவ் மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார். மேற்கொடு இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவும் மூன்று இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

 

இதுதவிர்த்து நியூசிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல் 10 இடங்கள் முன்னேறி 18ஆவது இடத்தையும், இந்திய அணியின் அக்ஸர் படேல் இரண்டு இடங்கள் முன்னேறி 38ஆவது இடத்தையும், வருண் சக்ரவர்த்தி 16 இடங்கள் முன்னேறி 80ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர், நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா ஆகியோரும் பந்துவீச்சளர்கள் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதுதவிர்த்து ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஃப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் முதாலிடத்திலும், முகமது நபி இரண்டாம் இடத்திலும் தொடர்கின்றனர். இதில் நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் 4ஆம் இடத்திற்கு முன்னேறிய நிலையில், மைக்கேல் பிரேவெஸ் 7 இடங்களும், ரச்சின் ரவீந்திரா 8 இடங்களும் முன்னேறி டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துள்ளனர். இந்த பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 10ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News