டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு வார்னிங் கொடுத்த ரோஹித் சர்மா!

Updated: Sun, Mar 05 2023 10:06 IST
Image Source: Google

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி, நம்பர் 1 அணியான ஆஸ்திரேலிய அணியை மூன்று நாட்களுக்குள் காலிசெய்து அபார வெற்றியைப் பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணியில் வழக்கம்போல, டாப் ஆர்டர் பேட்டர்கள் படுமோசமாக சொதப்பினார்கள். சரி, ரெகுலராக கை கொடுக்கும் லோயர் மிடில் வரிசை பேட்டர்களாவது அணியை தூக்கி நிறுத்துவார்களா என எதிர்பார்த்த நேரத்தில், அவர்களும் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து சொதப்பினார்கள். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109/10 ரன்ளுக்கு சுருண்டது.

இப்படி முதல் இன்னிங்ஸில் 109 என்ற மட்டமான ஸ்கோரை அடித்ததால்தான், இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா 59 (142) மட்டும்தான் பெரிய ஸ்கோர் அடித்தார். மற்றவர்கள் சொதப்பியதால், 163/10 ரன்களை மட்டும்தான் அடிக்க முடிந்தது. இறுதியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி.

முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. முதல் போட்டியில் அக்சர் படேல் 84 (174), ரவீந்திர ஜடேஜா 70 (185) ஆகியோர் இந்திய அணியைக் காப்பாற்றினார்கள். இரண்டாவது போட்டியில் அக்சர் படேல் 74 (115), அஸ்வின் 37 (71) ஆகிய பௌலர்கள்தான் சிறப்பாக பேட்டிங் செய்து மேட்ச் வின்னராக இருந்தனர். இப்படி பௌலர்கள் கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, பேட்டிங்கிலும் அசத்தியதுதான் இந்தியா முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற முக்கிய காரணம்.

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோற்றப் பிறகு அணி மீட்டிங் நடைபெற்றிருக்கிறது. அப்போது பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, ‘‘அணியில் பேட்ஸ்மேன்கள் எதற்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. 5 இன்னிங்ஸ்களிலும் 4 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு என்ன? ஸ்பின்னர்கள்தான் கூடுதல் பொறுப்பு எடுத்துக் கொண்டு பேட்டிங் செய்திருக்கிறார்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? பேசாமல், ஆல்-ரவுண்டர்களையே டாப் ஆர்டரில் களமிறக்கினால் என்ன?.

முன்புபோல் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு செல்ல முடியாது. பல திறமையான இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். இதை உணர்ந்து நான்காவது டெஸ்டில் செயல்படுங்கள். அதில் நிச்சயம் வென்றாக வேண்டும். இல்லையென்றால், சில அதிரடி மாற்றங்கள் டெஸ்ட் அணியில் இருக்கும்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை